“சிறந்த குடிமகன் திட்டமும், இன்னுயிர் காப்போம் திட்டமும் வெவ்வேறானவை!” - தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு
Innuyir Kappom Scheme, GGood Samaritan Scheme, Central Government, Tamilnadu GOVT, Tamilnadu, CMOTamilnadu, News7 Tamil, News7 Tamil Updates
மத்திய அரசின் சிறந்த குடிமகன் (Good Samaritan) திட்டமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில், இரண்டும் வெவ்வேறு திட்டம் என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை, சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. இந்த திட்டத்துக்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணாமலை கூறிய சிறந்த குடிமகன் திட்டம் என்பது வேறு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டம் என்பது வேறு.
தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின்படி தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்படும் விபத்துகளில் காயம் அடைவோரை, தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தாலும், முதல் 48 மணி நேரம் வரை ஆகும் செலவை அரசே ஏற்கும்.
மத்திய அரசின் சிறந்த குடிமகன் ( குட் சமாரிட்டன்) திட்டத்தின்படி, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்போருக்கு ரூ.5000 வழங்குவதே இத்திட்டம். மேற்குறிப்பிட்ட 2 திட்டங்களும் அடிப்படையில் வெவ்வேறானவை. இவ்வாறு தமிழ்நாடு ஊன்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.