For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடையா? ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறுவது என்ன?

05:24 PM Jun 22, 2024 IST | Web Editor
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடையா  ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறுவது என்ன
Advertisement

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறிய பதில் குறித்து காணலாம்.

Advertisement

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இந்நிறுவனம் மட்டுமின்றி தேர்தல் குறித்து இந்தியா டுடே, ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை வகிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டன.

ஆனால், தேர்தல் முடிவுகள் இதனுடன் ஒத்துப்போகவில்லை. பாஜக கூட்டணியால் 294 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இந்தியா கூட்டணி 232 இடங்களை வென்றது. சமீபத்தில், இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி நடத்திய தேர்தல் முடிவுகள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா விவாதத்துக்கு இடையிலேயே கண்கலங்கி மனமுடைந்து அழுதார். இது குறித்த காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் நேற்று அதிக அளவில் வைரலானது.

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கணிப்பில், பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டதால், பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்வை கண்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்தது. இதனை குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கக்கோரி இதுகுறித்த விசாரணைக்கு SEBI மற்றும் கூட்டு நாடாளுமன்றக் குழுவை நாடியுள்ளன. 

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் குழந்தைத்தனமானவை என்றும், ஒவ்வொரு குடிமகனும் அமைப்பும் தேர்தல் முடிவுகளை அறிய விரும்புவதாகவும் ஆக்சிஸ் மை இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான குப்தா கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தடை செய்வதால் எந்த பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “பங்குச் சந்தைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு. எங்கள் நற்சான்றிதழ்களை காட்ட, வாய்ப்பு கிடைத்தால், விசாரணைக்கான கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன்" என்று அவர் கூறினார். மேலும், ஜேபிசி அல்லது செபியின் விசாரணைக்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "எல்லா வகையான விசாரணைகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்" என்று குப்தா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement