For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் தாமதமின்றி ரயில்களை இயக்கும் கோட்டம் எது தெரியுமா?

07:00 AM Aug 16, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் தாமதமின்றி ரயில்களை இயக்கும் கோட்டம் எது தெரியுமா
Advertisement

மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் கால தாமதம் இல்லாமல் இயக்கப்படுகின்றன என மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடு முழுதும் நேற்று சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அந்த வகையில் மதுரை ரயில்வே நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது  மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மதுரை கோட்டம் கடந்த 4 மாதங்களில் ரூ.4.14.05 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாயில் பயணிகள் சேவை மூலம் ரூ.270.9 கோடியும், சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.115.6 கோடியும் கிடைத்தது. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் கால தாமதம் இல்லாமல் இயக்கப்படுகின்றன.

இதன்படி, சரியான நேரத்தில் ரயில்களை இயக்குவதில் தேசிய அளவில் மதுரை கோட்டம் முதன்மை பெற்றுள்ளது. பயணிகளின் வசதிக்காக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 17 ரயில் நிலையங்களில் 42 மின்துக்கிகள் அமைக்கப்படுகின்றன. அதில், 7 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், 6 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. மீதமுள்ளவை நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.

நடப்பாண்டு ரயில் நிலையங்களில் மண் பானை தண்ணீர் வழங்கப்பட்டது. இவை பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பயணச்சீட்டு செயலி பயன்பாடு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 4.5 சதவீதமாக இருந்த பயணச் சீட்டு விற்பனை ஜூலை மாதத்தில் 5.8 சதவீதமாக உயா்ந்தது. ரயில்வே ஊழியா்களின் வசதிக்காக மதுரையில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட உள்ளது."

இவ்வாறு மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தெரிவித்தார்.

Tags :
Advertisement