“எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” - சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!
அமலாக்கத் துறை 69-ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் அதன் இயக்குநர், 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அமலாக்கத்துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாகவும் அதற்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்று இருந்ததாகவும் பேசினார்.
இந்த நிலையில் அவரின் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக அரசை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ED-யின் தலைவர், 2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
ED-யின் வழக்குகளில் சுமார் 98% எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன. மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 5297 வழக்குகள் ED-யால் தாக்கல் செய்யப்பட்டன. எத்தனை வழக்குகள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன?
Yesterday, the head of central agency ED admitted that there’s been a surge of cases filed after Modi Govt came to power in 2014.
Here’s some facts on how ED has become Modi & Shah’s private mafia:
👉 About 98% of ED cases against politicians were filed on Opposition leaders.… pic.twitter.com/hp6aCy5RxM
— Saket Gokhale MP (@SaketGokhale) May 3, 2025
ED-யின் தண்டனை விகிதம் 47 மட்டுமே உள்ளது. தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு 1000 வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் எனக் கண்டறியப்படுகின்றனர். 1000 வழக்குகளிலும், 993 வழக்குகள் ED-யால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனென்றால் சட்டம் கடுமையாக இருப்பதால் ஜாமின் கிடைக்காது. பாஜகவின் உத்தரவுகளைப் பின்பற்றுவதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிகளை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது.
5297 வழக்குகளில் 47 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தண்டனை விகிதம் 0.7% மட்டுமே. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அரசியல் ரீதியாக நம்மை எதிர்த்துப் போராட முடியாத கோழைகள்”
இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார்.