97.76% ரூ.2000 நோட்டுகள் திரும்பின - ரிசர்வ் வங்கி தகவல்!
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76% ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யுமாறும், அவற்றை கொடுத்து விட்டு ரூ.100, ரூ. 200, ரூ. 500 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவித்தது. இதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டது.
2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 3.56 லட்சம் கோடி. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியதாகவும், மீதம் ரூ.8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது;
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 97.76 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.