ஒரு நாள் ஐபிஎஸ் அதிகாரியான 9 வயது சிறுவன் - இணையத்தில் வைரல்!
வாரணாசியில் ஒரு நாள் ஐபிஎஸ் அதிகாரியான 9 வயது சிறுவனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாரணாசியைச் சேர்ந்த 9 வயது சிறுவனான ரன்வீர் பார்தி. மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட இச்சிறுவன் மகாமனா புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தச் சிறுவனுக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதனை நிறைவேற்றும் விதமாக வாரணாசி காவல்துறையினர் சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் ஆக்கி, அவரை ஐபிஎஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாரணாசி காவல்துறை சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டது. காக்கி சட்டை அணிந்த அந்த சிறுவனுடன் மற்ற அதிகாரிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் பகிர்ந்த வீடியோவில், மற்ற அதிகாரிகள் அந்த சிறுவனுக்கு சலுயூட் அடித்து கை குலுக்குகின்றனர்.
அந்த சிறுவனும் பதிலுக்கு சலுயூட் அடிக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த இடுகை 4657 பார்வைகளை பெற்றதுடன், 142 லைக்குகளையும் பெற்றுள்ளது. இது குறித்து இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
09 वर्षीय बालक रणवीर भारती के ब्रेन ट्यूमर का इलाज महामना कैंसर अस्पताल वाराणसी में चल रहा है, ऐसी अवस्था में रणवीर ने #IPS अधिकारी बनने की इच्छा व्यक्त की, तो #adgzonevaranasi @piyushmordia के कार्यालय में बच्चे की इच्छा की पूर्ति की गयी । pic.twitter.com/xxeGFT3UKe
— ADG ZONE VARANASI (@adgzonevaranasi) June 26, 2024