தமிழ்நாடு அரசு துறைகளில் 861 காலியிடங்கள்... விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 861 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை:
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு 9.11.2024 அன்று நடைபெறுகிறது. தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 11.9.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது.