சீர்காழி அஜ்மத் பீவி தர்ஹா 84ம் ஆண்டு சந்தனக்கூடு விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவில் 84 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி
விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவி
தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு கொடியேற்றும் விழா
வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் 84 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்படும். மேலும் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் வருகிற 7 தேதி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற உள்ளது. மறுநாள் புதன்கிழமை அன்று விடியற்காலையில் 4 மணிக்கு சந்தன பூசும் வைபவம் நடைபெற உள்ளது.
கொடியேற்றம் நிகழ்வு சிறப்பு துவா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.மேலும் கேரளா , ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.