For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

79வது சுதந்திர தினம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
01:23 PM Aug 14, 2025 IST | Web Editor
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
79வது சுதந்திர தினம்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்திய விடுதலைக்கு காந்தியடிகள் தலைமையில் போராடி, சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் நவீன இந்தியாவை உருவாக்கி பிரதமர் பொறுப்பு வகித்த பண்டித நேரு முதற்கொண்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.

Advertisement

ஆனால், விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பாஜக கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து மீண்டும் மூன்றாவது முறை அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சியமைந்த பாஜகவிற்கு மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் வாக்களித்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்று இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற வகையில் உரிமைக் குரல் எழுப்பி வருகிறார். அவரது பங்களிப்பு இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், தேர்தல் ஆணையத்தின் வாக்குகளை திருடுகிற நடவடிக்கையின் மூலம் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு துணை போவதை தடுத்து நிறுத்திடவும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உள்ளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement