நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் - டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு
குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு முக்கிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். அணிவகுப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுத் துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது.
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய சாலைகளில் விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். துணை ராணுவப் படையினர் உட்பட 70,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்து கொள்கிறார். முன்னதாக தனி விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
இதையும் படியுங்கள் : கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!