For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

7வருட காத்திருப்பு ... - 'மின்மினி' திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹலிதா ஷமீம்!

09:50 PM Jul 20, 2024 IST | Web Editor
7வருட காத்திருப்பு        மின்மினி  திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹலிதா ஷமீம்
Advertisement

மின்மினி' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இயக்குநர்  ஹலீதா ஷமீம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் படம்தான் மின்மினி. இப்படம் தொடங்கி 7வருடங்கள் ஆகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமானின் மகளும் பின்னணிப்பாடகியுமான கதீஜா ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு தொடங்கிய மின்மினி திரைப்படம் தற்போது வரை தயாரிப்பில் உள்ளது. ஏழு ஆண்டுகளை கடந்து இப்படம் இன்னும் முடிவடையாமல் இருப்பதற்கு ஒரு பிரத்யேக காரணம் உள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், வளரும் வரை 7 வருடங்கள் காத்திருந்து தற்போது படப்பிடிப்பு நடந்துள்ளது. திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது.

இப்படத்தில் எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை உலகளவில் டெண்ட் கொட்டா மற்றும் சிம்பா நிறுவனம் ஆகியவை வெளியிடவுள்ளது. மின்மினி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. சில மாதங்களுக்கு முன் படத்தின் சிறப்பு திரையிடல் நடைப்பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். மேலும்  படத்தை முரளி கிருஷ்ணன் உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.

Tags :
Advertisement