மிசோரத்தில் வந்தே மாதரம் பாடிய 7 வயது சிறுமி - கிட்டார் பரிசளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளார். இவரது பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றும் இயங்கி வருகிறது. எஸ்தரின் வந்தே மாதரம் ஆல்பத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மிசோரம் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அந்தச் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மார்ச்.15) மிசோரம் சென்ற போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி எஸ்தர் நாம்தே வந்தே மாதரம் பாடல் பாடியதை கேட்டு நெகிழ்ந்துள்ளார். அவரைப் பாராட்டிய அமித்ஷா எஸ்தர் நாம்தேவை வரவழைத்து கிட்டார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்தார்.
இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி நாம்தேவை அய்ஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். பாரத மாதா மீதான 7 வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது.
Love for Bharat unites us all.
Deeply moved to listen to Mizoram's wonder kid Esther Lalduhawmi Hnamte, singing Vande Mataram in Aizawl today. The seven-year-old's love for Bharat Mata poured out into her song, making listening to her a mesmerizing experience.
Gifted her a… pic.twitter.com/7CLOKjkQ9y
— Amit Shah (@AmitShah) March 15, 2025
அவர் பாடக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக மாறியது. அவருக்கு ஒரு கிட்டார் பரிசாக அளித்து, அற்புதமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன்" என பதிவிட்டுள்ளார்.