நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி மாரியம்மன் கோவில் காடு பதிவை சேர்ந்தவர் மோகன் (60) விவசாயி. இவர் 7 ஆடுகள், மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். தினந்தோறும் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு அருகே உள்ள விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு கொட்டகைக்குள் புகுந்த வெறி பிடித்த தெருநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குத்தறியுள்ளது.
இதில் 7 ஆடுகளும் உயிரிழந்தன. மேலும் ஒரு பசு கன்றுக்குட்டி படுகாயம் அடைந்துள்ளது. இந்த நிலையில் காலை வழக்கம் போல் கொட்டகைக்கு வந்து பார்க்கும்போது ஏழு ஆடுகளும் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.