மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் 7 உணவுகள்!
மூளையை இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள் குறித்து இங்கு காணலாம்.
ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் மனநல மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் உமா நாயுடு மூளையை இளமையாக வைத்துக்கொள்ள உதவும் 7 உணவுகளை குறித்து கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மூளைக்கான உணவுகள் குறித்து ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குறைவான செலவில் மூளையின் திறனை அதிகரிக்க கீரை வகைகள், மூலிகைகள் போன்ற எளிய உணவுகளை உட்கொண்டாலே போதும் என உமா நாயுடு கூறியுள்ளார். மூளையின் திறனை அதிகரிக்க உதவும் உணவுகள் என அவர் கூறியுள்ளதாவது;
தயிர் மற்றும் பாலாடைக்கட்டி
தயிர் மற்றும் பாலாடைக்கட்டி நன்மைபயக்கும் பாக்டீரியாக்களை கொண்ட புரோபயோடிக் உணவுகளாகும். இவை நமது செரிமான அமைப்பிற்கும், குடலுக்கும் நன்மை பயக்கின்றன.
நட்ஸ் மற்றும் பெர்ரி
செரிமான அமைப்பை அரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான நார்ச்சத்தை இவை வழங்குகின்றன. பெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், உடல் மற்றும் மூளையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.
கீரைகள்
கீரைகளில் ஃபோலேட் அல்லது வைட்டமின் பி9 அதிகம் உள்ளது. இது அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்த உதவும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் மூளை ஆரோக்கியமானதாக இருக்கும்.
டார்க் சாக்லேட்
உயர்தர டார்க் சாக்லேட்டில் (70% கோகோ அல்லது அதற்கு மேல்) நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. டார்க் சாக்லேட் உட்கொள்வதால் மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் ஆகியவை அதிகரிக்கறது.
மூலிகை செடிகள்
துளசி, கொத்தமல்லி, புதினா போன்றவை உணவில் சுவையையும், உடல்நலத்திற்கு பல நன்மைகளையும் தருகின்றன. இந்த மூலிகை செடிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் தேவையற்ற அழுத்தங்களிலிருந்து மூளையை பாதுகாக்கிறது.