நாடாளுமன்ற தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 61.45% வாக்குகள் பதிவு! - தேர்தல் ஆணையம் தகவல்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப்பதிவின் போது 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்தது.
இதனையடுத்து, 3ம் கட்டத்தில் குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று (மே 7) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாவது கட்டத்தில் மொத்தம் 1,352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,229 பேர் ஆண்கள். 123 பேர் பெண்கள் ஆவர்.
இதையும் படியுங்கள் : ‘குட்டி பிசாசே குட்டி பிசாசே’ – ஹிப்ஹாப் ஆதியின் ‘PT Sir’ திரைப்பட முதல் பாடல் வெளியீடு!
இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
அசாம் - 75.26 சதவீதம்
பீகார் - 56.55 சதவீதம்
சத்தீஸ்கர் 66.99 சதவீதம்
தாத்ரா, டயு மற்றும் டாமன் - 65.23 சதவீதம்
கோவா - 74.27 சதவீதம்
குஜராத் - 56.76 சதவீதம்
கர்நாடகா - 67.76 சதவீதம்
மத்திய பிரதேசம் - 63.09 சதவீதம்
மகாராஷ்டிரா - 54.77 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 57.34 சதவீதம்
மேற்கு வங்காளம் - 73.93 சதவீதம்