For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

01:41 PM Jan 06, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 6 36 கோடி வாக்காளர்கள்   இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Advertisement

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். 

Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. அதன்படி 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன.

அதன் பிறகு அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ந்தேதி வரை பெறப்பட்டது. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வம்பர் 29-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

அதில், "தமிழகத்தில் மொத்தம் 6 கோடி 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 3 கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும், 9120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 1 லட்சத்து 76 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது". வாக்காளர் பட்டியலில் இதுவரை 4,48,138 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 4,66,374 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
Advertisement