Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு - பாஜக அறிவிப்பு!

02:09 PM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில்  பாஜக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான முதல்வர்கள் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது.

முதல்வர்களைத் தேர்வு செய்ய குழு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என பாஜக அறிவித்திருந்தது. இந்த நிலையில், மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், மனோகர் லால் கட்டா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!

மேலும், ராஜ்நாத் சிங் உடன் சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.  அதனை தொடர்ந்து, சத்தீஸ்கருக்கு முண்டா உடன் மத்திய அமைச்சர் சர்பனாந்தா சோனோவால்,  துஷ்வந்த் குமார் ஆகியோர் செல்ல உள்ளனர்.

மேலும், மத்தியப் பிரதேசத்திற்கு கட்டார் உடன் கே லக்ஷ்மண் மற்றும் ஆஷா லக்ரா ஆகியோர் அனுப்பப்படவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

Tags :
3statechiefministers5stateselectionAnnouncementBJPcommittee
Advertisement
Next Article