Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - 3 தமிழ் படங்கள் தேர்வு...!

கோவாவில் நடைபெற உள்ள 56-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தமிழ் திரையுலகில் இருந்து 2 திரைப்படம் மற்றும் 1 குறும்படம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
09:20 PM Nov 07, 2025 IST | Web Editor
கோவாவில் நடைபெற உள்ள 56-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தமிழ் திரையுலகில் இருந்து 2 திரைப்படம் மற்றும் 1 குறும்படம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Advertisement

இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில்  வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இவ்விழாவில் இந்திய மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் திரைப்படங்கள் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய பனாரமாவின் கீழ் திரையிட  தமிழகத்தில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன.

அதன்படி அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியான ’அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் 'பிறந்தநாள் வாழ்த்துகள்'  மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள 'ஆநிரை' என்ற குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளது.

 

Tags :
56indianfilmfestivalaaniraiAmarancinemanewslatestNewspiranthanalvazthukkalshivakarthikeeyan
Advertisement
Next Article