தம் அடித்தால் தொண்டைக்குள் முடி வளருமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவரின் புகை பழக்கத்தால் அவரின் தொண்டை பகுதியில் 2 அங்குலத்திற்கு முடி வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புகை மனித உடலுக்குப் பகை என்பது காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் கருத்தாகும். இதை பொருட்படுத்தாத ஏராளமானோர், தொடர்ந்து புகைபிடித்து வருகிறார்கள். புகையிலை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இருப்பினும், உலகம் முழுவதும் புகையிலை விற்பனை இன்னும் குறையவில்லை. முதியவர்கள் மட்டுமின்றி, தற்போது குழந்தைகள், இளைஞர்கள் கூட புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
ஆரம்ப காலத்தில் புகையிலை அல்லது வேறு எந்த போதைப்பொருளையும் பயன்படுத்துவது ஒரு பொழுதுபோக்காக பயன்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக அந்த நபர் அதற்கு அடிமையாகிறார். புகையிலை நுரையீரலை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், இதயம், கல்லீரல் மற்றும் பிற நாட்பட்ட நோய்களையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் 52 வயதான நபர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்தது வருவதாக கூறப்படுகிறது. அந்த நபர் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2007ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம், கடுமையான இருமல் போன்ற காரணங்களால் மருத்துவரை அனுகி உள்ளார். அப்போது அந்த நபரின் தொண்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளாக மருத்துவரை சந்தித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : “ஓசூரில் சர்வதேச விமான நிலையம்…திருச்சியில் கலைஞர் நூலகம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்நிலையில், தற்போது அந்த நபர் கடுமையான தொண்டை வலியால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டை பகுதியில் சுமார் 2 அங்குலம் முடி வளர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர். தொண்டையில் வளர்ந்துள்ள முடியை அறுவை சிகிச்சை மூலமாக 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மீண்டும் முடி வளர்ந்தால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.