எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 1 விசைப்படகுடன் 5 #Tamilnadu மீனவர்கள் கைது!
கன்னியாகுமரிலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோதுவது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழ்நாடு மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : #IndvsBan | டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் : வால்ஷை பின்னுக்கு தள்ளி அஷ்வின் 8-வது இடத்திற்கு முன்னேற்றம்
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகானது கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா நோக்கி செல்வதற்காக நெடுந்தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நெடுந்தீவில் விசைப்படகு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைபடகையும், அதில் இருந்து ஐந்து பேரை சிறை பிடித்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.