Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநில கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது!

10:15 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisement

சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர். இதனிடையே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில், ஆவடி -  அண்ணனூர் இடையே சிக்னலுக்காக நின்றிருந்தது.

இதை கண்ட, மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் சங்கிலியை இழுத்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளனர். பின், கீழே இறங்கி தண்டவாளத்தில் கிடந்த ஜல்லியை எடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மின்சார ரயில் பயணியர், ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து கொண்டனர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அன்று மதியம் 3:00 மணி அளவில், சிக்னல் கிடைத்து மின்சார ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், ரயில் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்களை தேடி வந்தனர். தாக்குதலின் போது எடுத்த வீடியோ அடிப்படையில், பிரச்னையில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் கடந்த 6ஆம் தேதி, திருத்தணியைச் சேர்ந்த சாம்சன்(19) என்ற கல்லூரி மாணவரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த மோதலில் ஈடுபட்ட அரக்கோணத்தைச் சேர்ந்த ஐயப்பன்(20), ஜெகன்  (18) திருத்தணியைச் சேர்ந்த சரத்(19), வல்லரசு (19) மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த 17 வயது ஐடிஐ மாணவர் உட்பட 5 பேரை ஆவடி ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags :
ArrestChennaiCollege studentsPachaiyappa's CollegePresidency College
Advertisement
Next Article