வார இறுதியை ஜாலியாக கழிக்க ஓடிடியில் வெளியான 5 திரைப்படங்கள்!
10:53 AM Feb 09, 2024 IST | Web Editor
Advertisement
பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டான அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் இன்று வெளியாகின.
Advertisement
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் பொங்கலையொட்டி அயலான் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏலியன் ஜேனரில் வெளிவந்த முதல் இந்திய படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட அயலான், குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பொங்கலையொட்டி வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பொங்கலையொட்டி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் ரிலீசானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாவிட்டாலும் சுமாராக ஓடியது. தமன் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
பரத், ஜனனி, சோனாக்சி சிங், பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படிக்கு காதல் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
தர்ஷன் நடிப்பில் கன்னடத்தில் வெளியான காட்டேரா என்ற திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 1970 களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.