5 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 வட மாநில இளைஞர்கள் கைது!
திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் பொன் பாடி போலீஸ் சோதனை சாவடியில், ஆந்திராவில் இருந்து வரும் பேருந்துகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் பேருந்தில் அமர்ந்திருந்த 3- வட மாநில இளைஞர்களை பிடித்து அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது அவர்கள் 25 கிலோ கஞ்சாவை தங்கள் உடமைகளில் மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர் போலீசார்.
பின்பு 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 இளைஞர்களையும் பிடித்தனர். விசாரித்ததில் மூன்று இளைஞர்களின் விவரங்களும் தெரியவந்தது அவர்களின் பெயர் ஆகாஷ் சர்க்கார், அகர்தலா திரிபுரா மாநிலம் சேர்ந்தவர், சுனில் தாஸ் அசாம் மாநிலம் சேர்ந்தவர் மற்றும் சங்கர் ராய் அசாம் மாநிலம் சார்ந்தவர் இவர்கள் 3-பேரும் நெருங்கிய நண்பர்கள் என தெரிந்தன.
இதனை தொடர்ந்து இவர்கள் வட மாநிலத்தில் இருந்து 25 கிலோ கஞ்சாவை சென்னையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர். திருத்தணி வழியாக வந்த இவர்களை பிடித்து திருத்தணி மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மதுவிலக்கு காவல் நிலைய போலீசார்.
இந்த 3-வட மாநில இளைஞர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு 3- பேர் மீது 25 கிலோ கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் மூன்று இளைஞர்களை புழல் சிறையில் அடைத்தனர்.