For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - சென்னை தீவுத்திடலில் தொடங்கியது!

09:21 AM Jan 13, 2024 IST | Web Editor
48 வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி   சென்னை தீவுத்திடலில் தொடங்கியது
Advertisement

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்

Advertisement

சென்னை தீவுத்திடலில் 'சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 70 நாட்கள் நடக்கும் இப்பொருட்காட்சியில், அரசுத் துறை அரங்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என நுாற்றுக்கணக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணி நடத்தும் ஆலோசனை | இன்று தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும் -ஜெய்­ராம் ரமேஷ்

விழாவை துவக்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

"நான் பள்ளியில் பயிலும் போது பல முறை குடும்பத்துடன், இது போன்ற சுற்றுலா பெருட்காட்சியை சுற்றிபாரத்து விட்டு செல்வது வழக்கம். அதே பொருட்காட்சியை திறந்து வைப்பது எனக்கு பெருமை. இதில் கூடுதல் மகிழ்ச்சி நான் பொருப்பு வகிக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அரங்கமும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளது.

அரசின் அனைத்து துறையின் சிறப்பான திட்டங்கள் குறித்து இந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பொருட்காட்சியை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்னால் வர முடியவில்லை. மேலும், அடுத்த 70 நாட்கள் நடக்கும் இந்த பயன்மிக்க சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை பொதுமக்கள் அதிக அளவில் பார்வையிட வேண்டும்"

மேலும், விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே,சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி, சுற்றுலாத் துறைச் செயலர் க.மணிவாசன் , இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags :
Advertisement