Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!

09:37 AM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

எல்லைத் தாண்டி மீன் பிடித்த தாக புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை,  இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து,  60 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  இந்நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,  அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து 4 மீனவர்களையும்,  அவர்கள் வைத்திருந்த ஒரு படகையும் சிறைபிடித்து காங்கேசன்கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவர்கள் 4 பேரும் புதுக்கோட்டை மாவட்டம்,  கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பார்த்திபன் (32),  சாரதி (28),  ராமதாஸ் (52),  முரளி (42) ஆவர்.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களை,  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.  இந்நிலையில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ArrestFishermenNeduntheevusrilanka navyTamilNadu
Advertisement
Next Article