Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

4 மாநில தேர்தல் முடிவுகள் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்.!

01:56 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 2 மணி முன்னிலை நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ்  ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.    இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல்  முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :

இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 2மணி நேர நிலவரப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 33 இடங்களிலும் , பாஜக 54 இடங்களிலும் பிற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. இதன்படி காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் மாநிலத்தில்  ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது.

Tags :
AIMIMashok gehlotAssembly Election ResultsAssembly Elections 2023BJPBRSchattisgarhChattisgarh election 2023Congresselection resultsElections2023kcrKTRMadhya Pradesh Elections 2023MadhyapradeshNarendra modiNews7Tamilnews7TamilUpdatesRahul gandhiRajasthanRajasthan Election 2023TelanganaTelangana Elections 2023Vasundhara Raje
Advertisement
Next Article