4 மாநில தேர்தல் முடிவுகள் : மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக.!
4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
- ராஜஸ்தான் 75.45%
- சத்தீஸ்கர் 67.34%
- மத்திய பிரதேசம் 71.11%
- மிசோரம் 78%
- தெலங்கானா 71.14%
இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.