கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு - நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்னல் தாக்கி ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனிதா, சின்னப்பொன்னு, ராஜேஸ்வரி, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு, உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்குத் தக்க நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.