Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேருந்தில் பயணம் செய்த 4 கிளிகள்.. ரூ.444 வசூலித்த நடத்துநர்!

07:45 PM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

கர்நாடகாவில் பேருந்தில் பயணம் செய்த நான்கு கிளிகளுக்கு  பயணச்சீட்டு கட்டணமாக ரூ. 444 நடத்துநரால் வசூலிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பெங்களூரிலிருந்து மைசூருக்கு கர்நாடக அரசு பேருந்து ஒன்று ( KSRTC) சென்றுள்ளது. அப்பேருந்தில் பெண் ஒருவர் தனது பேத்தி மற்றும் நான்கு கிளிகளுடன் சென்றுள்ளார்.  அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகள், மற்றும் பறவைகறளுக்கு மொத்த டிக்கெட் விலையின் நான்கில் ஒரு பங்கு வாங்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் நடத்துநர் அப்பெண்ணிடம்  ஒரு கிளிக்கு ரூ.111 வீதம் நான்கு கிளிகளுக்கு ரூ.444க்கு டிக்கெட் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை போலவே கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அப்பெண்ணிற்கும், சிறுமிக்கும் டிக்கெட் வாங்கப்படவில்லை. இந்நிகழ்வு தெலுங்கு ஸ்கிரைப் என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.

என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
conductorKarnatakaKSRTCParrotsTicket
Advertisement
Next Article