சிதம்பரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
சிதம்பரத்தில் 3 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரதம், குச்சிப்புடி, நாட்டிய நாடகம், உள்ளிட்ட நடனங்களை கண்டுகளித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.
சிதம்பரத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ம் தேதி 43 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று 3 வது நாளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் பெங்களூரு, சிதம்பரம், சென்னை,கேரளா, ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தனர்.
சிறப்பாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பாரதம், குச்சிப்புடி, நாட்டிய நாடகம் உள்ளிட்ட நாட்டியங்களை கலைஞர்கள் நடராஜப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்தனர். மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த நாட்டிய விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நடன கலைஞர்களின் நடனத்தை கண்டு களித்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.