Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை - மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

04:17 PM Nov 11, 2023 IST | Web Editor
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  அக்டோபர் மாதம் 14,28 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.  அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

இதையும் படியுங்கள்:  “இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது” – ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி

மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.  இதனையடுத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 38 பேரையும்  யாழ்பாணத்தில் உள்ள இந்திய துனை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  படகுக்கான விசாரணை டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும்.  அன்றைய தினம் படகு உரிமையாளர்கள் ஆஜராக  நீதிபதி சஜீத் உத்தரவிட்டார்.

Tags :
38fishermenConditions'December12FishermenNews7TamilRameswaramReleasedSrilanka
Advertisement
Next Article