ரூ.3,662 கோடி ஈவுத் தொகை: மத்திய அரசுக்கு வாரி வழங்கிய #LIC
பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) மத்திய அரசுக்கு ரூ.3,662.17 கோடி ஈவுத்தொகை வழங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
"கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இறுதிகட்ட ஈவுத் தொகையாக ரூ.3,662.17 கோடி மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எல்ஐசியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சித்தார்த்த மொஹந்தி வழங்கினார். நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எம்.பி. தங்கிராலா உடனிருந்தார்.
இதையும் படியுங்கள் : Apple, #Google, #Microsoft நிறுவனங்களுக்கு சென்ற முதலமைச்சர் #MKStalin! “தமிழ்நாட்டை ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி மையமாக்க உதவும் சந்திப்பு!”
இதற்கு முன்னர் மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ. 2,441.45 கோடியை நிறுவனம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி வழங்கியது. இத்துடன், மத்திய அரசுக்கு 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகையாக ரூ.6,103.62 கோடி வழங்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.