Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது - இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!

07:41 AM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 32 தமிழ்நாடு மீனவர்களை ஐந்து விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்.. யார்? – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

இதையடுத்து, தமிழ்நாடு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த ஏழு தமிழ்நாடு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் மொத்தமாக கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 32 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு  சம்பந்தப்பட்ட மன்னார் மற்றும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று காலை ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Tags :
arrestedFishermenNavySrilankaTamilNadu
Advertisement
Next Article