For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023 கல்வியாண்டில் பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30% உயர்வு!

11:32 AM Mar 21, 2024 IST | Web Editor
2023 கல்வியாண்டில் பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30  உயர்வு
Advertisement

கடந்த 23 ஆண்டுகளில் பெண்கள் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவிதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளனர். 

Advertisement

2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததையடுத்து கடந்த ஆண்டு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது.  இதன் மூலம் பட்டய கணக்காளர் தேர்வை எழுதக் கூடிய மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : 32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!

இந்த ஆண்டு பட்டய கணக்கியல் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 43 சதவீதத்தினர் மாணவிகள் என அறிவித்துள்ளனர்.  இந்த தேர்வை எழுதிய பெண்களில் 48 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிலையில்,  கடந்த 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பெண் பட்டய கணக்காளர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் கூறியதாவது :

"கடந்த சில அண்டுகளாக கணக்கியல், வரி, நிதி சார்ந்த துறைகளில் பெண்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.  கடந்த 24 ஆண்டுகளில் பட்டய கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெற மாணவிகளின் எண்ணக்கை கணிசமாக உயர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த முறை வளாக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கான இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.  குறிப்பாக,  சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது"

இவ்வாறு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் கூறினார்.

Tags :
Advertisement