முன்பதிவு இல்லா டிக்கெட் - மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!
முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மொபைல் மூலம் மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.
ரயில் பயணத்தை மக்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். ரயில் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால் சாமாளிய மக்கள் அதிகமாக ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த சூழலில் ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன.
பின்னர் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக டிக்கெட் பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக செல்போனிலயே டிக்கெட் பதிவு செய்யும் முறை அமுலுக்கு வந்தது. காகிதம் பயன்படுத்தாமல் டிக்கெட் பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டு பெற்றது.