For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்பதிவு இல்லா டிக்கெட் - மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!

07:15 PM Aug 07, 2024 IST | Web Editor
முன்பதிவு இல்லா டிக்கெட்   மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு
Advertisement

முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மொபைல் மூலம் மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

ரயில் பயணத்தை மக்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.  ரயில் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால் சாமாளிய மக்கள் அதிகமாக ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.  இந்த சூழலில் ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தன.

பின்னர் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக டிக்கெட் பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  தொடர்ந்து, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக செல்போனிலயே டிக்கெட் பதிவு செய்யும் முறை அமுலுக்கு வந்தது. காகிதம் பயன்படுத்தாமல் டிக்கெட் பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டு பெற்றது.

18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

பயணிகளின் வசதிக்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் செல்போன் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 26,978 பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்தனர்.

பயணிகள்களிடம் தீவிர விழிப்புணர்வு செய்ததால் இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்தது.  இந்த சூழலில் செல்போன் மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.  அதன்படி, செல்போன் மூலம் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதம் 3.6 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 5.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Tags :
Advertisement