For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 சிறைவாசிகள் விடுதலை விவகாரம் - ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

03:50 PM Dec 11, 2023 IST | Web Editor
3 சிறைவாசிகள் விடுதலை விவகாரம்   ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் ஆளுநர் பிப். 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள கோவை சிக்கந்தர், ரியாசுதீன் உள்ளிட்ட 3 சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான கோப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால் இந்த கோப்பு மீது தமிழ்நாடு ஆளுநர் ரவி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் தற்போதைய நிலை என்ன என உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.

மேலும், 3 சிறைவாசிகள் விடுதலை கோப்புகள் ஏன் நிலுவையில் உள்ளன? இதுகுறித்து ஆளுநர் எப்போது முடிவெடுப்பார்? இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் 3 சிறைவாசிகள் விடுதலை கோப்பு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் பிப்ரவர் 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடியாக உத்தரவிட்டார்.

பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள சிக்கந்தர், ரியாசுதீன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரைவில் கடந்த 2021 முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement