For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று ரீ-ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்!

04:07 PM Dec 08, 2023 IST | Web Editor
இன்று ரீ ரிலீஸ் ஆன 3 திரைப்படங்கள்
Advertisement

22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ , 28 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’  மற்றும் 17 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’  ஆகிய 3 திரைப்படங்கள் இன்று மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

பொதுவாக தமிழ் திரையுலகில் மைல்கல் வெற்றிகளை கொடுத்த படங்கள் தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜி நடித்த கர்ணன், ரஜினி நடித்த பாட்ஷா என தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வெற்றி படங்கள், பல ஆண்டுகள் கழித்தும் மீண்டும் வசூல் வேட்டை நிகழ்த்தியிருக்கின்றன.

ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இப்படியான சூழலில் பல ஆண்டுகள் முன் வெளிவந்த படங்களை ரீரிலிஸ் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்தப் படங்களுக்கு புதிதாக வெளியான படங்களுக்கு  நிகராக கூட்டம் சேர்கிறது. சிறப்பு தினங்களை கொண்டாடப்படும் வகையில் அல்லது ரசிகர்களின் கோரிக்கைகளுக்கேற்ப இந்தப் படங்கள் வெளியிடப்படுகின்றன. 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம் பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான், வடசென்னையின் வாழ்க்கையை அரசியலுடன் இணைத்து விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்கள் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தந்த படங்களின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
Advertisement