"நண்பன்" திரைப்பட பாணியில் மருத்துவமனைக்குள் பைக்குடன் நுழைந்த நபர் - வீடியோ வைரல்!
மயக்கமடைந்த தாத்தாவை ஒருவர் பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான 3 இடியட்ஸ் 2009ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய், ஜீவா மற்றும் ஜீவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் தந்தையை ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு விஜய் அழைத்துச் செல்லும் ஒரு காட்சி அனைவரின் மனதிலும் நீங்காது இன்றுவரை இடமிடித்துள்ளது. இதேபோல், நிஜ வாழ்க்கையிலும் இதே போன்ற ஒரு காட்சி நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், சத்னா மாவட்ட மருத்துவமனையில் பிப்ரவரி 11-ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஒருவர் நோயாளியை பைக்கில் ஏற்றிக் கொண்டு நேராக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் காணப்படும் நபர், மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளின் படிவங்களைத் தயாரிக்கும் அவுட்சோர்ஸ் தொழிலாளி.
திகுரியா தோலாவில் வசிக்கும் நீரஜ் குப்தா, தனது தாத்தாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகக் கூறினார். இப்படிப்பட்ட நிலையில் நேரடியாக தாத்தா மோதி லால் குப்தாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓட்டிய அவர், பைக்கை எங்கும் நிறுத்தவில்லை. நேராக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். மாவட்ட மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் மற்றும் இதர வசதிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறினாலும், ஊழியரின் இந்தச் செயல் தற்போது செய்தியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அந்த இளைஞரை கடுமையாக கண்டித்துள்ளார் . எதிர்காலத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என அந்த இளைஞருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.