இந்தியா - ஆஸி. இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி - இன்று தொடக்கம் !
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது .
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது . இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகல் - இரவு ஆட்டமாக இன்று நடைபெறவுள்ளது. மேலும் பகல் - இரவு ஆட்டம் என்பதால் இந்திய அணியின் அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது .
இந்நிலையில், 2 வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ரோகித் சர்மாவுக்கு குழந்தை பிறந்துள்ள காரணத்தால் முதல் போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். தற்போது ரோஹித் சர்மா 2 வது போட்டிக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் .