இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி - அதிரடி ஆல்ரவுண்டரை களமிறக்கிய ஆஸி... யார் அந்த வரலாற்று நாயகன்?
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான, ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிச.6ஆம் தேதி அடிலெய்ட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் புதிதாக ஆல் ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பியூ வெப்ஸ்டர் கடந்த சீசனில் 900 ரன்கள், 30 விக்கெட்டுகள் எடுத்து 132 வருட வரலாற்று சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்பாக சர் கேரி சோபர்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
தற்போதைய சீசனில் 448 ரன்கள், 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் இந்தியா ஏ அணிக்கு எதிராக 61 நாட் அவுட், 46 நாட் அவுட் உடன் 3-19, 3-49 ஆகியவையும் அடங்கும். இவரை நிரந்தரமாக அணியில் சேர்க்க வேண்டும் என ஆஸியின் முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஷ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.