மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு - முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவில் இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை மாநாடு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து மதுரை வந்துள்ளார். இந்த நிலையில் மாநாட்டு திடலின் வரலாறு திரும்புகிறது எனும் வாசகத்துடன் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு 6 வாகன நிறுத்திமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 500க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டிற்காக 100 மருத்துவர்கள் உட்பட 1000 பேர் கொண்ட மருத்துவக்குழு மற்றும் 50 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக 3,500 காவல்துறையினர் மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.