For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு!

10:53 AM Feb 25, 2024 IST | Jeni
தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை   கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும், வேட்பாளர் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், முடிவு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! - மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை

இந்நிலையில், நாளை தொகுதி பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட இந்த முறை அதிகமான தொகுதிகளை திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement