சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - ராயப்பேட்டையில் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
ராயப்பேட்டையில் 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் மெட்ரோ ரயில் பணியினை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு பெற்று, மெட்ரோ சேவை
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் சென்னையில்
பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் நடைபெற்று வருகிறது என்பது,
குறிப்பிடத்தக்கது.
சென்னை ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்- 2, வழித்தடம் 4-இல்
பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் ராயப்பேட்டை
முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கும் பணியை
மேற்கொள்வதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணி இன்று(ஜூலை- 21) தொடங்கியது.
இந்தப் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மத்திய சென்னை நாடாளுமன்ற
உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி பணிகள்
குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழு தலைவர் மதன் மோகன் ஆகியோர் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் :“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” – தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!
ராயப்பேட்டை தொடர்ந்து, ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் பாதை,
பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரயில் நிலையம், பூந்தமல்லி மெட்ரோ பணிமனை
உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.