Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2ம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாக வாய்ப்பு!

10:03 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களுக்கு அரசுத் திட்டப் பணிகளை துவக்கி வைக்கச் செல்லும் அதே வேளையில், அன்றைய தினத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 16 மாநிலங்களில் போட்டியிடும் 195 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த வாரத்தில் நடைபெறும் மத்திய குழு கூட்ட ஆலோசனைக்குப் பின்னர் இரண்டாம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் குறித்து ஆலோசனை கூட்டம் 5 மணி நேரத்திற்கும் மேலாக டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடகா, ஒடிசா மாநில பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக தரப்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 25 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் பாஜக வேட்பாளர் தேர்வு குழுவிடம் கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
BJPDelhiElection2024Loksabha Elections 2024meetingNDA allianceNews7Tamilnews7TamilUpdatesParliament Election 2024
Advertisement
Next Article