Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Gujarat வெள்ளத்தில் தத்தளித்த 27 தமிழர்கள்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!

09:22 AM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 27 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு பஸ், கோலியாக் கிராமத்தில் உள்ள தரைபாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது.

இதையும் படியுங்கள்: #FireAccident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

அந்த பேருந்தில் தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சென்ற 27 சுற்றுலா பயணிகள் கடந்த 30 மணி நேரத்திற்கும் மேல் வெள்ளத்தில் சிக்கினர். இது குறித்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்நகர் பேரிடர் மீட்பு படையினர் தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கிய சொகுசு பஸ்சில் இருந்து தமிழ்நாட்டு பக்தர்களை டிரக் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குஜராத் மாநில மீட்புப் படையினா் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags :
FloodGujaratGujaratFloodHeavy rainfallnews7 tamilRescue
Advertisement
Next Article