For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மணிக்கு 260 கிமீ வேகத்தில் #America-வை மிரட்டும் மில்டன் புயல்... தப்புமா புளோரிடா?

07:38 PM Oct 09, 2024 IST | Web Editor
மணிக்கு 260 கிமீ வேகத்தில்  america வை மிரட்டும் மில்டன் புயல்    தப்புமா புளோரிடா
Advertisement

புளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள மில்டன் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன.

மேலும், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் மக்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். ஹெலன் புயல் பாதிப்பை ஏற்படுத்திச் சென்ற சில நாட்களிலேயே மற்றொரு புயல் புளோரிடா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதாவது, மெக்ஸிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சக்தி வாய்ந்த புயலாக உருவாகி புளோரிடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு மில்டன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் புளோரிடாவிலிருந்து மக்கள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி, புளோரிடாவில் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த புயல் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் காரணமாக அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் புயல் கரையைக் கடக்கும்போது சற்று வலுவிழந்து ஆபத்து பிரிவில் 4-ஆம் நிலை புயலாக கரையைக் கடந்தாலும் காற்றின் வேகம் மணிக்கு 233 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், டாம்பா வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்று அமெரிக்க தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது.

இன்று பகல் 12 மணி நிலவரப்படி (அமெரிக்க நேரப்படி), புளோரிடாவின் டாம்பாவிலிருந்து தென் மேற்கே 300 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள மில்டன் புயல், அதிகபட்ச வேகமாக மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையமான (என்.ஹெச்.சி) தெரிவித்துள்ளது. மிக ஆபத்தான புயலாக அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவு, டாம்பா நகரில் மில்டன் புயல் கரையைக் கடக்கும் என்றும் என்.ஹெச்.சி எச்சரித்துள்ளது. இதன்காரணமாக அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags :
Advertisement