For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லாரி இறக்குமதிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25 சதவீதம் வரி - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
10:53 AM Oct 07, 2025 IST | Web Editor
நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
லாரி இறக்குமதிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் 25 சதவீதம் வரி   அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Advertisement

நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும். டெலிவரி லாரிகள், குப்பை லாரிகள், பொது பயன்பாட்டு லாரிகள், போக்குவரத்து மற்றும் பள்ளி பஸ்கள், டிராக்டர்-டிரெய்லர் லாரிகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் அடங்கும்.

Advertisement

மெக்சிகோ, கனடா நாடுகள் அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக உள்ளது. அதிபர் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் இந்த இரு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Tags :
Advertisement