For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வால் 24-வது மாணவர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
01:05 PM May 20, 2025 IST | Web Editor
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் 24 வது மாணவர் உயிரிழப்பு   எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!

ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்வாரா? அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே, திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என கூறியது பொய்! இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!

ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
NEVER EVER GIVE UP!

தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement