For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024 | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு...காலை 11 மணி வரை 24.37%!

11:55 AM Apr 19, 2024 IST | Web Editor
மக்களவைத் தேர்தல் 2024   தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு   காலை 11 மணி வரை 24 37
Advertisement

தமிழ்நாட்டில் காலை 11 மணி வரை 24.37 சதவீதம் வாக்கு பதிவாகின. 

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் காலை 11 மணி வரை 23.72 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளன.  அதிகபட்சமாக தருமபுரியில் 29.24% பதிவாகி உள்ளன.  தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

தொகுதி                          சதவீதம்

  1. கள்ளக்குறிச்சி -       26.58%
  2. திண்டுக்கல்               26.34%
  3. நாமக்கல்                     26.07%
  4. கரூர் -                              26.07%
  5. சேலம் -                           25.97%
  6.  விழுப்புரம்                   25.69%
  7. தருமபுரி -                       25.66%
  8.  பெரம்பலூர்                  25.62%
  9. ஆரணி -                          25.53%
  10.  திருப்பூர்                        25.47%
  11.  விருதுநகர் -                  25.39%
  12.  ஈரோடு -                         25.37%
  13.  சிதம்பரம்‌ -                    25.35%
  14.  பொள்ளாச்சி               25.02%
  15. தேனி -                                24.99%
  16.  தஞ்சாவூர்                       24.96%
  17.  திருவள்ளூர்                   24.93%
  18.  திருவண்ணாமலை  24.92%
  19.  நாகை -                              24.92%
  20.  கிருஷ்ணகிரி -             24.82%
  21.  மயிலாடுதுறை -         24.76%
  22.  அரக்கோணம்              24.71%
  23.  திருச்சி                             24.7%
  24.   கன்னியாகுமரி -        24.68%
  25. வேலூர் -                           24.67%
  26.  கடலூர்                              24.66%
  27.  காஞ்சிபுரம்                    24.65%
  28.  கோயம்புத்தூர் -     24.54%
  29.  தென்காசி                    24.51%
  30.  சிவகங்கை -               24.47%
  31.  தூத்துக்குடி                  24.16%
  32. நீலகிரி -                        24%
  33. ராமநாதபுரம் -             23.89%
  34.  திருநெல்வேலி          23.78%
  35.   ஸ்ரீபெரும்புதூர் -     23.53%
  36.  மதுரை -                        22.73%
  37.  வடசென்னை             22.05%
  38. மத்திய சென்னை - 20.09%
  39.  தென்சென்னை      21.97%

மொத்தம் -                    24.37%

Tags :
Advertisement